Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா? சற்றுமுன்னர் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

 


தடுப்பூசி செலுத்தி நிறைவடையும் வரை, நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவத்துள்ளார்.

அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

அச்சுறுத்தலான பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி எதிர்வரும் ஓரிரு தினங்களில் நிறைவு செய்ய முடியும். 

30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 96 வீதமானோர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஊசிக்கு அச்சம் கொண்ட சிலர் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை. 

எந்தவித அச்சமும் இன்றி, அவ்வாறான தரப்பினரும் விரைவில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுங்கள்.

அத்துடன், தற்போது 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட தரப்பிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 12 வயதுக்கு மேற்பட்ட தரப்பிற்கு விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு வருகின்றது.

மேலும், 12 வயதுக்கு குறைவானோருக்கு தடுப்பூசி செலுத்த சில நாடுகள் ஆரம்பித்துள்ளது, இலங்கையிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது.

அதனால், தடுப்பூசி செலுத்தி நிறைவு செய்யும் சரியான திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments