முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்லெட் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான நிலையில், முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முன்வைக்கட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி – கடற்படை பேச்சாளர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டமை குறித்தும் அவர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார சவால்கள் குறித்து தனது வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஆணையாளர் இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மையால் அடிப்படை உரிமைகள் மீது ஏற்படுகின்ற மோசமான தாக்கத்தை இது புலப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை குறித்து அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்தார்
0 Comments