இலங்கைக்கு அந்நிய செலாவணி வருவதை கருத்தில் கொண்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை பரிசீலிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணியை கருத்திற் கொண்டு வாகன இறக்குமதி மாத்திரமின்றி தற்போது இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்வரும் காலங்களில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட் இணையத்தள கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை தற்போது வெற்றிகரமாக கொவிட் தடுப்பூசி வழங்கி வருவதனால் விரைவில் சுற்றுலா துறையை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
இறக்குமதிக்கு முக்கிய காரணமாக இருக்கும் தொழிற்சாலைகளை வழமையை போன்று நடத்தி செல்ல முடிந்தால் நாட்டில் மீண்டும் அந்நிய செலாவணி அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: