Advertisement

Responsive Advertisement

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல் - கோவிந்தன் கருணாகரம் காட்டம்


இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அனுராதபுர சிறைச்சாலைக்கு மதபோதையில் சென்று, தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாழிட வைத்து, துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்தி, தனது சப்பாத்தினை நக்குமாறும் கோரி அவமானப்படுத்தியவர்.

கடந்த சில நாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட்ட அவர், நேற்றையதினம் மட்டக்களப்புக்கு வந்து கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்.

பொதுஜன பெரமுன மட்டக்களப்பு அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுச்சென்றுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தினை நக்கவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது, அவரது கால்களை நக்கவா? என கேள்வியெழுப்பியுள்ள கோவிந்தன் கருணாகரம், லொஹான் ரத்வத்தை ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, அவர் ஒரு கழிசறை அரசியல்வாதி"யென தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments