சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இத்தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், “அந்தக் கைதிகள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களே ஆவர். 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட வில்லை” என்றார்
0 Comments