Home » » இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்குவது நாட்டை ஆபத்துக்குள்ளாக்குகின்றது- அரசமருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்குவது நாட்டை ஆபத்துக்குள்ளாக்குகின்றது- அரசமருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

 


இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்குவது நாட்டை ஆபத்துக்குள்ளாக்குகின்றது என அரசமருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக சமூகத்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி நிலையங்களிற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளாத நிலை காணப்படலாம் ஆனால் அவர்கள் சமூகத்தில் வைரஸ் சுமைகளை அதிகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் சமூகத்தில் வைரஸ் சுமைகள் காணப்பட்டால் அதனால் புதியமாறுபாடுகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சூழ்நிலையில் மாற்றமடைந்த வைரஸ் சமூகத்திற்குள் இருந்து உருவாக கூடும் – தடுப்பூசிகளால் அதனை கட்டு;ப்படுத்த முடியாத நிலை காணப்படலாம், இதன்காரணமாகவே வைரஸ் சுமைகளை குறைப்பதற்கு தடுப்பூசியை செலுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |