Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி பெற்றாலே கொரோனாவை நாம் விரட்டியடிக்க முடியும்- மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்

 


வரதன்)


மாவட்டத்தில் கொரோனா 1ம்கட்ட தடுப்பூசி 2 இலட்சத்து 82 ஆயிரம் பேருக்கும் 2வதுகட்ட தடுப்பூசி 2இலட்சத்து 49 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 3066 பேரும் 30 தொடக்கம் 60 வயதிற்கும் இடைப்பட்ட 35 221 பேர் தடுப்பூசிகளை பெறாமல் உள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்களை பெற்று இராணுவத்தினர் வீடுவிடாக சென்று தடுப்பூசிகளை வழங்கிவருகின்றனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற தயக்கம் காட்டுவதால் எம்மால் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முடிக்க முடியாமல் உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா 3வது அலை காரணமாக 286 பேர் மரணமடைந்துள்ளதோடு (2021.09.14) அன்று 146 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 8 பேர் மரணித்துள்ளனர்.

தடுப்பூசி பெறாதவர்கள் வைத்தியசாலைகளில் முன்னாயத்ததுடன் சென்று தடுப்பூசிகளை பெற வேண்டும். மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி பெற்றாலே கொரோனாவை நாம் விரட்டியடிக்க முடியும். தடுப்பூசி பெறாதவர்களுக்காக இராணுவத்தினர் சுகாதார பிரிவினர் தினமும் வேலை செய்கின்றனர்.எனவே காலத்தை விரயமாக்காது அனைவரும் தடுப்பூசிகளை பெறுமாறு கேட்டுகொள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments