நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, விரைவில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெறவுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கத் தூதுவராக அவர் நியமனம் பெறவுள்ளார்.
அமெரிக்காவுக்கு இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செல்லமுன் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவிடம் நீண்டநேரம் பேச்சு நடத்தியிருக்கின்றார் என அறியமுடிகின்றது.
இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சவாலாக உள்ள நிலையில் அதனைக் கையாண்ட முக்கிய இராஜதந்திரியாக உள்ள மஹிந்த சமரசிங்கவுக்கு மீண்டும் இதற்கான பொறுப்பு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments