Advertisement

Responsive Advertisement

பிரபல வைத்தியசாலையில் சிகிச்சை - திடீரென சிங்கப்பூர் சென்றார் மகிந்த



பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திடீரென சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இத்தாலி சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமற்ற வகையிலேயே சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலி சென்ற 17 பேர் அடங்கிய குழுவில் வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தவிர்ந்த ஏனைய அனைவரும் பிரதமருடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நியூயோர்க் ஐ,நா. கூட்டத்தில் கலந்து கொள்வற்காக வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா சென்றுள்ளார்

Post a Comment

0 Comments