Home » » நனோ தொழில்நுட்பம் மூலம் கொரோனா கிருமியை அழிக்கும் திரவம் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிப்பு

நனோ தொழில்நுட்பம் மூலம் கொரோனா கிருமியை அழிக்கும் திரவம் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிப்பு

 


கொரோனா தொற்று வைரஸின் உட்புற மேற்புற கிருமிகளை அழிக்க நனோ தொழில்நுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கியை பேரதனைப் பல்கலைக் கழகத்தின் விசேட வைத்தியர் நிபுணர் திலான் ராஜபக்ஷ கண்டுபிடித்துள்ளார்.


இந்தத் திரவத்தைப் பணப்பைகள், கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் பாடசாலைப் பைகள் போன்றவற்றுக்கு மேற்பரப்பிலும் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித் துள்ளார்.

குறித்த திரவத்தை ஒரு முறை விசிறினால் 90 நாட்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் என்றும், அதன் நுட்பமான செயல்திறன் காரணமாக, ஒரு முறை ஆடைகளுக்கு விசிறினால் பல வாரங்களுக்குச் செயலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |