Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வாழைச்சேனையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 22 வயதுடைய இளம் யுவதி 30 போத்தல்கள் கசிப்புடன் கைது!


 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியான்மடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் யுவதி ஒருவரை 30 போத்தல்கள் கசிப்புடன் நேற்று (02) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான நேற்று இரவு குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர் இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 22 வயதுடைய இளம் யுவதி ஒருவரை செய்ததுடன் 30 போத்தல்கள் கசிப்பையும் கைப்பற்றினர்.

சந்தேக நபரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments