Home »
எமது பகுதிச் செய்திகள்
» “ஃபைசர் தடுப்பூசியை 12 - 18 வயதினருக்கு கொடுங்கள்”
“ஃபைசர் தடுப்பூசியை 12 - 18 வயதினருக்கு கொடுங்கள்”
12 - 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி போட வேண்டும் என்றுஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வாக தடுப்பூசி உள்ளது.
எனவே 20-30 வயதினருக்கு வழங்குவதை விட 12 - 18 வயதுடையோருக்கு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சங்கம் வழியுறுத்தியுள்ளது.
இதேவேளை, உலக சுகாதார அமைப்பினால் 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போடுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஃபைசர் தடுப்பூசி மட்டுமே.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை கொடுக்கலாம்.
ஆகவே, 20 - 30 வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதை விட, 12 - 18 வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.
மேலும், கொரோனா காரணமாக இறப்பவர்களில் 80.7 சதவிகிதத்தினர் தடுப்பூசி போடாதவர்கள். எனவே 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: