Advertisement

Responsive Advertisement

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு -அரசாங்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பு


 தமது சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் தீர்வை வழங்காததை அடுத்து தொடர் பணி புறக்கணிப்பில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது பிரச்சினை தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமொன்று எட்டப்படாத பட்சத்தில், தாம் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியிருந்த நிலையிலேயே, அரசாங்கம் இன்று இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments