Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்


ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீர இன்று காலமானார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றுகாலை தமது 65 ஆவது வயதில் அவர் காலமானார்.

மங்கள சமரவீர கடந்த 13ம் திகதி முதல் கொவிட் தொற்று காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளை மங்கள சமரவீர வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments