Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!

 


இறுக்கமான தேவை ஏற்பட்டால் மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறுதியான தீர்மானமாகவே ஊரடங்கு சட்டம் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சூழ்நிலையில் தடுப்பூசிகளை செலுத்துவதே சிறந்த தீர்வாக அமையும்.

இந்த செயற்பாட்டினையே உலகின் முன்னணி நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

அத்துடன் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து மக்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார தரப்பினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளையே அரசாங்கம் மேற்கொள்வதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் போராட்டங்கள் வலுப்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Post a Comment

0 Comments