Advertisement

Responsive Advertisement

பெரும் ஆபத்து! இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை

 


இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற எரிமலை அடுத்தடுத்து 7 தடவை வெடித்துள்ளதால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் இருக்கின்றன.

அதில் இது முக்கியமானதாகும். இந்த எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை கிளம்பி வந்தது. நேற்று திடீரென வெடித்து சிதறியது.

அடுத்தடுத்து 7 தடவை எரிமலை லாவா குழம்புகள் வெடித்து வெளியேறின.

இதனால் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு புகை மூட்டமாக காட்சி அளித்தது. அருகில் உள்ள கிராமங்களுக்குள் சாம்பல்கள் புகுந்தன.

இதனால் எந்த நேரத்திலும் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

2010-ம் ஆண்டு இந்த எரிமலை வெடிப்பில் 350 பேர் பலியானார்கள். இதன் அருகே பழங்கால நகரம் யோக்யாத்ரா இருந்தது.

இந்த எரிமலை வெடித்து அந்த நகரமே அழிந்த போனதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments