Home » » வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

 


இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் படு கொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ .சி ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் கண் கண்ட சாட்சியாக இருக்கும் ஒருவரின் வாக்குமூலத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற காரணத்தினாலும் வழக்கு விசாரணையில் ஆட் சேபனை தெரிவித்திருந்தனர் .

பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையில் சரியான தடையங்களை வழங்காததன் காரணத்தினாலும் குறித்த வழக்கினை பிறிதொரு பொலிஸ் பிரிவுக்கு வழங்க கோரியிருந்தனர்.    இந்நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரால் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் புலனாய்வுத் துறையினருக்கு வழக்கு விசாரணையை கையளிக்க முடியாததால் இந்த வழக்கு விசாரணை பொலிஸ்மா அதிபர் புலனாய்வு துறையினருக்கு வழங்குவதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்ட கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் குறித்த வழக்கு விசாரணையை புலனாய்வுத் துறையினர் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க கேட்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21 ம் திகதி 34 வயது மதிக்கத்தக்க பாலசுந்தம் எனும் இளைஞன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |