Advertisement

Responsive Advertisement

லம்டா திரிபில் இருந்து தடுப்பூசியே காக்கும்

 


தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள், கொரோனாவின் டெல்டா மாறுபாடு விட மிகவும் கடுமையான லம்டா மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது என்று கொழும்பு மருத்துவ பீடத்தின் மருந்தியல் பேராசிரியர் டொக்டர் பிரியதர்ஷனி கலப்பதி தெரிவித்தார்.


எதிர்காலத்தில் உருவாகும் கொரோனாவின் புதிய திரிபுகளுக்கு
தடுப்பூசியே பாதுகாப்பை வழங்கும் என்று நம்பப்படுவதாகவும் கொரோனாவின் பல்வேறு மாறுபாடுகள் இருந்தாலும், இன்று பயன்படுத்தப்படும் அதே சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை அவர் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்க உலக சுகாதார நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்ட டோசிலிசு மோப் என்ற மருந்து பற்றி இப்போது பலர் கேட்கிறார்கள் என்றும், அது ஒரு நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த வழி என்றும் இரண்டு ஊசிக்குப் பின்னர் வைரஸ் பாதிக்கப்பட்டாலும் சிக்கல்கள் வெகுவாகக் குறைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இது மரண அபாயத்தைக் குறைப்பதுடன், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments