Advertisement

Responsive Advertisement

ஆசிரியர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கோட்டாபய வழங்கிய உத்தரவு

 


ஆசிரியர் சங்கங்களினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

கொவிட் சட்டத்திற்கு அமைய, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமையை அடுத்து, பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பொறுப்புள்ள படித்தவர்கள் என்பதனால், மக்களை தெளிவூட்டும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என கூறியுள்ள ஜனாதிபதி, வைரஸ் பரவிவரும் நிலையில், அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments