சினோஃபார்ம் தடுப்பூசி மருந்தானது வயதானவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குறைந்தளவான நோய் எதிர்ப்பு சக்தியையே வழங்குவதாக பஹ்ரேனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
பைசர், அஸ்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக் வீ ஆகிய தடுப்பூசி மருந்துகள் வயதானவர்களுக்கு அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என நீலிகா மலவிகே தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தாம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு மூலம் தடுப்பூசி மருந்தின் செயற்றிறன் குறித்த சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து தடுப்பூசி மருந்துகளும் கொரோனா வைரசினால் மரணம் உட்பட கடுமையான நோய் நிலைமைகள் ஏற்படுவதை தடுக்கின்றது எனவும் அவர் மற்றுமொரு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
0 Comments