Home » » இலங்கையை உலுக்கும் கொவிட் மரண எண்ணிக்கை

இலங்கையை உலுக்கும் கொவிட் மரண எண்ணிக்கை


கொவிட் தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் நேற்று (25) உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200ஐ கடந்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் அடங்குகின்றனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவிட் மரணங்கள் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று பதிவான 209 மரணங்களையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,157ஆக அதிகரித்துள்ளது.   

 

Gallery
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |