தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்து ள்ளார்.
விசேட ஜனாதிபதி செயலணியின் இன்றைய அமர்வின் போது நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தோரின் தொகை ஆகியவற்றை கவனத்திற் கொண்டே தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது நூற்றுக்கு நூறு வீதம் முறையாக இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,
ஊரடங்குச் சட்டமானது புதிதாக நோயாளர்கள் உருவாவதைத் தடுக்கவும் வைரஸ் பரவலை தடுக்கவுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலமே வைரஸ் பரவலை தடுக்க முடியும். அதனைக் கவனத்திற் கொண்டு மக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு செயற்படாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் செயற்பட தவறுவார்களானால் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
0 Comments