Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நில ஆக்கிரமிப்பை தடுக்க செல்லும் அரச அதிகாரிகளை தாக்க முற்படும் இனவாத காடையர்களை சட்டம் தண்டிக்க வேண்டும்!

 


இனவாத அரசியல்வாதிகளுக்கு பின்னால் இருந்து தமிழர்கள் நிலத்தினை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளார் அ.நிதான்சன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

கல்முனை 90 வீதம் தமிழர்கள் வாழும் பிரதேசமாகும், கல்முனையில் தமிழர்களின் நிலம் பல்வேறு வழிகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமாக காணி ஒன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பில் அவ்விடத்துக்கு கடமை நிமிர்த்தம் சென்ற நிர்வாக உத்தியோகத்தரை தாக்க முற்பட்டுள்ளனர்.

இவ்வாறு அரச அதிகாரிகளையும் தாக்க முற்படும் இனவாத காடையர்களை சட்டம் தண்டிக்க வேண்டும். மேலும் ஊடகவியலாளர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் சில செய்தி தாள்களில் முஸ்லிம்களின் காணியை தமிழர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக போலி குற்றச்சாட்டான செய்தியை வெளியிடுகின்றனர்.

கல்முனையில் தமிழர்கள் பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படும் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இஸ்லாமபாத் எனும் பெயரில் கிராம சேவகர் பிரிவை நடமுறைப்படுத்துகின்றனர். இவ்வாறு திரிபடையச் செய்யும் செயல்களை அரச அதிகாரிகளும் இனவாத அரசியல்வாதிகள் போல் செயல்படுவது தவறான விடயம் ஆகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரின் கடமைக்கு பங்கம் விளைவித்த விடயத்தில் அரச அதிகாரிகள் ஒரு சிலரின் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கதாகும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரம் வழங்காமல் தடுத்து,  சட்டவிரோதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச காணிகளை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு வருகின்றனர்.

இதனை நிறுத்த வேண்டும் அவ்வாறு இல்லையேல் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments