Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகள் மீள திறப்பு - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 


நாடளாவிய ரீதியில் சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீள திறக்கப்படுமென கல்வியமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி அரச பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நாளை புதன்கிழமை தொடக்கம் கொவிட் தடுப்பூசி அளிக்கும் பணிகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சு இன்று பகல் அறிவித்துள்ளது.

242,000 ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளித்த பின்னரே பாடசாலைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments