ஜனநாயகப் போராளி அமைப்பில் இருக்கும் சில நபர்களை குறிவைத்து இந்த அரசாங்கம் விசாரணை நடத்துவது மட்டுமல்லாமல் கைது செய்யும் செயற்பாடு ஒரு கேவலமான செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் .
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வளிக்கப்படாமல் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சில அரசியல்வாதிகளை உங்களது மடியில் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் எமது இனத்துக்காக போராடி ஜனநாயக வழியிலேயே அரசியலில் கால் பதித்து வருபவர்களை கைது செய்வதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
இது இந்த அரசாங்கத்தின் ஒரு கேவலமான செயற்பாடு என்பதை நாம் உணர வேண்டும். இதுவே இன்று நடக்கின்றது . எமது விடுதலைக்காக போராடி, தற்போது ஜனநாயக ரீதியில் ஜனநாயகத்திற்காக ஜனநாயக அரசியல் வழியிலே இணைந்து செயற்படுகின்ற இந்த அமைப்பினருக்கு உதவி செய்ய பலரும் முன் வர வேண்டும்.
அவ்வாறு முன் வருபவர்களை வரவேற்கின்றேன் விசேடமாக இவ்விடத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments