Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் மண்ணில் புதையுண்ட நகரம் - 20 பேர் மாயம்!

 


ஜப்பானின் மத்திய பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு காரணமாக இதுவரையில் 20 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் மத்திய பகுதியான அற்றமியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக குறித்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினையடுத்த இடம்பெற்ற மண்சரிவினையடுத்து நகரம் மண்ணில் புதையுண்டுள்ளதாக வெளியாகும் காணொளிகள் மூலம் தெரியக்கிடைக்கின்றது.

மண்சரிவு காரணமாக சில வீடுகள் அழிவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டி்ககாட்டியுள்ளது.

இதேவேளை காணமால் போனவர்களில் இருவரது சடலங்கள் துறைமுக மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியி்ட்டுள்ளது

இந்த நிலையில் பிரதமர் யோசிஹிட் சுஹா முப்படையினரையும் இணைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு படை ஆகியன இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜப்பானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரைணமாக 200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments