மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைக் கையாளும் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் எழுந்துள்ள இனங்களுக்கு இடையேயான மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என ஸ்ரீலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் நடைமுறையில் உள்ள தமிழ் மக்களை மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடிய பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க, ஸ்ரீலங்கா அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில், சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையான பிழையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள மனித உரிமைகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து உரையாடுவதில், ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, மற்றும் ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகேயும் பங்கேற்றுள்ளனர்.
0 Comments