Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு...!!

 


மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்த மாமாங்க பகுதி இன்று (15) காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments