Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சின் செயலாளர் தகவல்

 


உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகள் மீள்பரிசீலனை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மீள்பரிசீலனையின் பின்னர் புதிய தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் படி ஒக்டோபர் 3 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் 4ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை உயர்தர பரீட்சையும் நடத்தப்படும் எனவும் முன்னர அறிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments