Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் நான்கு பகுதிகள் தொடர்ச்சியாக சிவப்பு வலயங்களாக அடையாளம்...!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு பிராந்தியத்தில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இதுவரை இரண்டு இலட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் இரண்டு இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 58 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மட்டக்களப்பில் இதுவரை 8,525 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments