Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விரைவில் தீர்வு காண்போம்! அரசாங்கம் வழங்கிய உறுதி


ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைக்கு கொள்கை ரீதியில் தீர்வு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை தொழிற்சங்கத்தினர் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் முரண்பாடான வகையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க தீர்மானித்துள்ளோம்.

ஏதிர்வரும் திங்கட்கிழமை இப்பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் தீர்வு வழங்குவதாகவும் அவரி மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments