Advertisement

Responsive Advertisement

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு!

 


ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திய இலங்கையின் சாதனையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.


இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த மைல்கல்லை எட்டிய சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்திற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments