Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறையில் புதிதாக 3 பொலிஸ் நிலையங்களை திறக்க நடவடிக்கை !

 


அம்பாறையில் புதிதாக 3 பொலிஸ் நிலையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இறக்காமம், நிந்தவூர் மற்றும் பண்டாரதுர ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு புதிதாக பொலிஸ் நிலையங்களை திறக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து, மாவட்டத்தில் தற்போது தமண பொலிஸ் பிரிவிலுள்ள இறக்காமம் பிரதேசத்தில் இறக்காமம் பொலிஸ் நிலையமும், தற்போது சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் பொலிஸ் நிலையமும், பண்டாரதுர பிரதேசத்தில் பண்டாரதுர பொலிஸ் நிலையமும் திறக்கப்படவுள்ளன.

இந்த புதிய பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதற்கான பொலிஸ் பிரிவு எல்லைகள் பிரிக்கப்பட்டு, அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு வெகு விரைவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறப்பதற்கான நமவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments