Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கூட்டமைப்பினருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு !

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.


கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த விடயம் குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வேறு அலுவலர்களும் திரு. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.

தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கும் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறத்துவதாக உறுதியளித்தார்” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments