Home » » ஜூலை 05 முதல் முற்பதிவின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை !

ஜூலை 05 முதல் முற்பதிவின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை !

 


ஆட்பதிவு திணைக்கள சேவைகளை ஜூலை 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட அளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தொலைபேசி அழைப்பின் மூலம் திகதி மற்றும் பதிவு இலக்கத்தை பெறுவதன் மூலம் முற்பதிவின் அடிப்படையில் இச்சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதே போன்று பிரதேச செயலகங்களின் அடையாள அட்டைப் பிரிவில் சேவைகளை பெறுவோர், உரிய மாகாண அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்வது கட்டாயமாகுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்த நபர்களின் தேசிய அடையாள அட்டைகள் பதிவுத் தபாலில் மிக விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட்-19 தொற்று 3ஆம் அலை பரவலைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் ஆட்பதிவு திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்பதிவு திணைக்கள சேவைகளை பெறுவதற்கான முற்பதிகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களை அழைத்து, திகதி மற்றும் பதிவு இலக்கத்தை பெற முடியும்.

பத்தரமுல்ல தலைமை அலுவலகம் 0115 226 126/ 0115 226 100
வட மாகாண அலுவலகம் 024 222 72201
கிழக்கு மாகாண அலுவலகம் 065 222 9449
வடமேல் மாகாண அலுவலகம் 037 555 4337
தென் மாகாண அலுவலகம் 091 222 8348
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |