Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் பலி!

 


மட்டக்களப்பு காத்தான்குடி பிரிவிற்கு உட்பட்ட கிரான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிரான்குளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 49 வயதுடையவர் தனது வெள்ளரித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த வேளையிலேயே மின்சாரம் தாக்கியதனால் உயிரிழந்துள்ளார்.

வெள்ளரி தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கான நீர் பம்பியிற்கான மின்சார இணைப்பை கையாண்ட போது மின்சாரம்

 தாக்கியுள்ள நிலையில் இதனைக் கண்ட உறவினர்கள் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்துவருவதுடன், அன்டிஜன் பரிசோதனைகளின் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனையினை மேற்கொள்வதற்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments