Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரணிலுடன் இணையும் பெருமளவு எம்.பிக்கள் - கைமாறியது முக்கிய ஆவணம்


 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரான பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (16) புதன்கிழமை விஜயம் செய்து, கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவே தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கின்றார் என்பதற்கான ஆவணத்தைக் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments