Home » » டெல்டா வகை கொரோனா நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் விசேட பரிசோதனை...!!

டெல்டா வகை கொரோனா நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் விசேட பரிசோதனை...!!

 


இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, மீண்டும் நாடு முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, அடுத்த வாரமளவில் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

பரிசோதனை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பரிசோதனை கருவிகளுக்கு மாறாக, இம்முறை OXFORD NANO தொழிநுட்பம், முதன் முறையாக பயன்பத்தப்படவுள்ளதாகவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

NANO தொழிநுட்பத்திற்கு தேவையான கருவிகள், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்ட ஐந்து பேர் தெமட்டகொடை பகுதியில் அடையாளங் காணப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, குறித்த தொற்று ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதா என்பது தொடர்பில், மீண்டும் ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |