Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் இரண்டு கொவிட் தடுப்பூசிக்கான டோஸ்களை போட்டவர்களுக்கும் கொரோனா தொற்று!

 


இரண்டு கொவிட் தடுப்பூசிக்கான டோஸ்களை போட்டுக் கொண்ட சிலருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குருணாகல் மாநகரசபையின் பணியாளர்கள் சிலருக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. கொவிசீல்ட் கொவிட் தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளும் இந்த பணியாளர்களுக்கு ஏற்றப்பட்டிருந்தது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச பணியாளர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசியின் இரண்டையும் பெற்றுக்கொண்ட மாநகரசபையின் சாரதி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்பட்டு வருவதாக நகரசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments