Home » » சிங்கம் மற்றும் குரங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொடர்பில் ஆராய வேண்டியது அவசியம் !

சிங்கம் மற்றும் குரங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொடர்பில் ஆராய வேண்டியது அவசியம் !

 


சீனாவில் பூனை மற்றும் குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய நாடுகளில் இது உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் ஏனைய நாடுகளில் சிங்கம் மற்றும் குரங்குகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கையிலும் இது தொடர்பில் ஆராய வேண்டிய முக்கியத்துவமுடையதாகும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், சில நாடுகளில் சிங்கம் மற்றும் கொரில்லா உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த விலங்குகளை பாதுகாக்கும் மனிதர்களிடமிருந்தே அவற்றுக்கு தொற்று ஏற்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாக எந்தவொரு நாட்டிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையிலும் இது தொடர்பில் ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவமுடையதாகும். காரணம் சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஏதேனுமொரு விலங்கிடமிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த விலங்கு எது என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதற்கமைய இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பூனை குடும்பத்தைச் சேர்ந்த அல்லது பூனை இனத்தைச் சேர்ந்த (சிங்கம் உள்ளிட்ட விலங்குகள்) விலங்குகளிடமிருந்தும் , கொரில்லா போன்ற குரங்கினத்திடமிருந்தும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியுள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான நாடுகளில் இந்த தரவு இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |