Advertisement

Responsive Advertisement

முதலைக்குடா சிறையாத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திப்பொருட்கள் கைப்பற்றல்

 


(செ.துஜியந்தன்)

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா சிறையாத்தீவு எனும் இடத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களைத்தேடி தீடிர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.




முதலைக்குடா வடக்கு பக்கமாக அமைந்துள்ள சிறையாத்தீவு எனும் இடத்தில் இக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காலத்திலும் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடைபெற்றுவருவதாக அங்குள்ள மக்களால் கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் மற்றும் கிராம இளைஞர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து  கொக்கட்டிச்சோலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரும், முதலைக்குடா கிராம இளைஞர்கள் சமுக ஆர்வலர்கள் தோணி மூலம் சிறையாத்தீவுக்கு சென்று அங்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களைத்தேடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது  அங்கு எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு கேஸ் சிலிண்டர்கள், 09 கசிப்பு பரல்கள், இரண்டு பூலிகள் இராணுவத்தினராலும், இளைஞர்களாலும் கைப்பற்றப்பட்டதுடன் அங்கு பிடிக்கப்ட்ட பரல்களில் இருந்த  கசிப்புக்கள் அவ் இடத்திலே அழிக்கப்பட்டன.

இச் சட்டவிரோத கசிப்பு உ;பத்தியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

Post a Comment

0 Comments