Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச சுற்றாடல் தினம்


செ.துஜியந்தன்


இன்று மண்முனை தென்; எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் சர்வதேச சுற்றாடல் தினம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர்கள், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


இங்கு சுகாதார விதிமுறைகளைப்பின்பற்றி பிரதேசத்தின் பொது இடங்கள் மற்றும் பிரதான வீதிகளில் பயனுள்ள மரக்கன்றுகள் பிரதேச செயலாளரினால் நாட்டிவைக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால்  பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் பணிப்பின்பேரில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் குறிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்கும் மியோவாக்கி முறையிலான காடு வளர்ப்பு திட்டம் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் அடங்கிய குழுவினர் களுவாஞ்சிகுடி வடக்கு, களுவாஞ்சிகுடி தெற்கு, மாங்காடு ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ள மியோவாக்கி காடு வளர்ப்பு திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.
பின்னர்  பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்  சுற்றாடல் சிறப்பு செய்தி மடல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதற்பிரதியினை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம்  சிரேஸ்ட ஊடகவியளாலளர் அகரம் செ.துஜியந்தனுக்கு வழங்கி வைத்தார். மேலும் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் பசுமைக்கழங்களுக்கான சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments