Advertisement

Responsive Advertisement

பலத்த பாதுகாப்புக்களுடன் கிழக்கிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்!

 


ஸ்ரீலங்காவின் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் திடீர் விஜயமொன்றை மட்டக்களப்புக்கு மேற்கொண்டுள்ளனர் .

இன்று காலை 10 மணி அளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர்கள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments