Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரண்டே நாட்களில் 70 கோடிக்கு மதுபானம் விற்பனை

 


இலங்கையில் இரண்டே நாட்களில் 70 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் இந்த மது விற்பனை இடம்பெற்றுள்ளதாக குறித்த திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

நீடித்த பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின், கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அனுமதி வழங்கப்பட்ட 1409 மதுக்கடைகள் மூலமே இந்த வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும். அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தால் இத்தொகை மேலும் அதிகரித்திருக்கும் என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments