Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை கீதம்ஸ் இசைக்குழுவின் தலைவவரும் , இலங்கையின் தொகைக்காட்சி புகழ் பாடகர் சுதன் அவர்கள் காலமானார்

கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இசைத்துறையில் பல இசைக்குழுக்களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளிலும் தனது துணைவியாருடன் விசேட நிகழ்வுகளின் பொழுது பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். சுதன் அவர்கள் அண்மையில்  வசந்தம் தொகைகாட்சியில் பால்களைப் பாடி அந்நிகழ்ச்சில் பங்குபற்றியிருந்தார்.


இசையே இவரது மூச்வதகக் காணப்பட்டது. அந்த அளவிற்கு பாடல்களிலும் இசையிலும் ஆர்வம் கொண்ட ஒரு அற்புதக் கலைஞராக சுதன் அவர்கள் காணப்பட்டார். 10.06.2021 அன்று தனது வீட்டில் தனியாக  இருந்த வேளையில் நேற்று பின்நேரம் அவரது சகோதரர் பல முறை தொலைபேசி அழைப்பை அடுத்தபோது அதற்கு பதில் அளிக்காமையினால்  அவரது சகோதரர்,  நண்பர்கள் சகிதம்  வீட்டுக்குள் சென்ற வேளையில் சுதன் அவர்கள்  தரையில் விழுந்து கிடந்ததை அவதானித்தனர். பின்னர் உடனடியாக கல்முனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர். உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சடலம் வைத்திய பிரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 



   சுதன் அவர்கள் மனிதாபிமானம் கொண்ட ஒரு நல்ல மனிதர். அத்துடன் மிருகங்களுக்கு உணவளிப்பதில் மிகுந்த ஈடுபாடுடையவர். ஒரு நல்ல மனிதனையும்,  திறமையான கலைஞனையும் இழந்து கல்முனை பிரதேசம் தவிக்கிறது. அன்னாரின் ஆத்மா இறையடி சேர நாங்களும் இறைவனைப் பிராத்திக்கின்றோம். 

Post a Comment

0 Comments