இலங்கையில் மேலும் 101 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 2011 ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை உருவாகியதையடுத்து, கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கும் என்று சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலதிகமாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று, இலங்கையில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் மரண எண்ணிக்கையில் 200 ஐ தாண்டும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் 23 நாட்களுக்கு அதிகமாக பயணத் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.
இச்சூழ்நிலையில் நேற்றைய தினம் 101 பேர் உயிரிழந்துள்ளமையானது இலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
0 Comments