Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை மீன்களால் ஆபத்தா? வெளிவந்தது அறிக்கை

 


இலங்கையில் மீன் நுகர்வு தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) உறுதியளித்துள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் தீயினால் சேதமடைந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலில் இருந்து ரசாயனங்கள் மற்றும் பிற அசுத்தங்கள் கடலில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரையொதுங்கியதுடன், கடற்கரையோரங்கள் சூழல் பாதிப்பு குறித்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது.

மேலும், இலங்கை மீன்கள் மனித நுகர்வுக்கு ஏற்றது அல்ல என்று பல தரப்பினர் பல்வேறு கூற்றுக்களை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் ஆய்வுகளை நடத்திய நாராவின் ஆரம்ப அறிக்கையின்படி, மீன்களை உட்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments