Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு...!!


 (எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் இன்று (7) சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இன்று காலை 6 மணியளவில் திடீரென சோர்வடைந்த நிலையில் இச் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பதினான்கு வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது பிர்னாஸ் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் சிலவேளை பாம்பு தீண்டி உயிரிழந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிப்பதாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

மரணமடைந்த சிறுவனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments