Advertisement

Responsive Advertisement

“உங்கள் அரசியல் முடிவுக்கு வரும்" சாணக்கியனை எச்சரித்த நாமல்


 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துறை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க முடியுமாயின், பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சாதாரண இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அரசாங்கம், கடந்த வருடத்திற்குள் கைது செய்யப்பட்ட சுமார் நூற்றிற்கும் மேற்பட்டோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இன்று முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதன்போது இந்தக் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, சாணக்கியன் போன்றவர்களின் அரசியல் செயற்பாடுகள் நிறைவுக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் கருத்து வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.

Post a Comment

0 Comments