Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறையில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பு!

 


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றம் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் பொலிசாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு நேற்றைய தினம் பாரிய சுற்றிவளைப்பு ஒன்றினை இராணுவ மோட்டார் படையணியின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்திருந்தனர். இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காது வீதிகளில் சுற்றித்திரிந்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை விநாயகபுரம் கடற்கரை வீதியில் காட்ஸ் விளையாடிக் கொண்டு இருந்த கும்பல் ஒன்றினையும் இராணுவ மோட்டார் சைக்கில் படையணியின் உதவியுடன் திருக்கோவில் பொலிசார் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தின இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணியினர் திருக்கோவில் பிரதேச கொவிட் தடுப்பு செயலணியின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments